Trending News...

வீடு திரும்பும்போது அடுத்தடுத்து 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி.

அம்பாறை மாவட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய 13 வயதான பாடசாலை மாணவி மூவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை கிராமமொன்றை சேர்ந்த 13 வயதான குறிப்பிட்ட மாணவி அண்மையில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டி சாரதியான இளைஞன் ஒருவருடன் பழக்கம் ஏறபட்டு, பிறிதொரு நாளில் வீட்டுக்கு தெியாமல் முச்சக்கர வண்டி சாரதியுடன் பூங்கா ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.

காலை 10 மணி முதல் மாலை வரை பூங்காவில் பொழுதை கழித்த பின்னர் அம்பாறை பேருந்து நியைத்தில் மாணவியை, அவர் இறக்கி விட்டார்.

எனினும், அங்கிருந்து பேருந்தில் வீடு செல்லும் வழி தெரியாமலும், வீட்டில் கண்டிப்பார்கள் என்ற அச்சத்திலும் மாணவ அச்சமடைந்திருந்த நிலையில், அவரை கவனித்த உஹண, மாலிஹாதென்ன பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். மாணவி வீடு செல்ல உதவுவதாக கூறி, அம்பாறைய நகரிலுள்ள விடுதியொன்றில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.

பின்னர் தன்னுடன் கொழும்பு வருமாறு அழைத்து சென்று, பேருந்தில் ஏறியவர், சிறிது தூரம் சென்ற பின்னர் 500 ரூபாவை மாணவிக்கு கொடுத்து விட்டு இறங்கி விட்டார்.

கொழும்பு வந்த மாணவி ஒரு இடமும் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்க, விடுமுறையில் வந்த சிப்பாய் ஒருவரை சந்திக்கிறார். சிப்பாயும் ஆசை காட்டி மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அம்பாறை செல்லும் பேருந்தில் ஏற்றி விட மாணவியை அழைத்து வந்துள்ளார். குறிப்பிட்ட சமயத்தில் அம்பாறைக்கான பேருந்துகள் எதுவும் இல்லாததால் மெனராகலை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டார்.

மொனராகலை வந்த மாணவி, அம்பாறை செல்ல வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்க, வெல்லவாய பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உதவி செய்வதாககூறி, மொனராகலை நகரிலுள்ள விடுதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்தார்.

இறுதியில் அந்த இளைஞன் மூலம் அம்பாறைக்கு சென்றார்.

இதற்குள் மாணவியை காணாததால் பெற்றோர் பொலிசில் முறையிட்டிரு்தனர். இதனால் அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட சிறுமி பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியுடன் பொழுதை போக்கிய அன்று மாலையில் வீடு திரும்ப பயந்த மாணவி 3 பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ வீரர், மொனராகலை இளைஞர் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.