ஹோட்டலில் பாலியல் தொழில்: புரோக்கர் உட்பட 4 பேர் அதிரடி கைது!

விக்கிரவாண்டி அருகே உணவு விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் பிரபலமான தனியார் உணவு, தங்கும் விடுதி இயங்கி வருகிறது. அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தனிப்படை வைத்து விடுதி முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் மற்றும் உணவக மேலாளரும் கைதாகினர். இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருச்சியின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த 5 பேர் கைது செய்யப்பட்டதோடு, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.