6 பேருக்கு கொரோனா..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டது 320 பேருக்கான பீ.சி.ஆர்.

 யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 320 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் வடக்கின் பல பாகங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட 320 பேருக்கான பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.