யாழ்.அனலைதீவு மறு அறிவித்தல் வரை முற்றாக முடக்கப்பட்டது..!

 இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்திவந்த 3 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை யாழ்.அனலைதீவு சுகாதார பிரிவினால் முற்றாக முடக்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தொிவித்துள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நடமாடி யதன் காரணமாக காரைநகர் பிரதேசத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. மஞ்சள் கடத்தலில் தொடர்புபட்ட வகையிலே 

கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் அவர்கள் பயணம் செய்த இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றது. அதே நேரத்திலே தற்காலிகமாக தீவகத்துக்கான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல அனலை தீவு பகுதி தற்காலிகமாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேறாதவாறும் வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் உற் செல்லாத வாறும்தடை விதிக்கப்பட்டு அப் பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.