யாழில் ஒரே நேரத்தில் இரு காதலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்!!

யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி நிறுவனமொன்றின் மாணவியொருவர், தமது பிரதேசத்தை சேர்ந்த பிறிதொரு உயர்கல்வி நிறுவனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

சில காலமாக இந்த காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில், யுவதி தன்னுடன் கூட படிக்கும் கிளிநொச்சி பகுதி இளைஞன் ஒருவருடனும் காதல் தொடர்பை அண்மை நாட்களாக பேணியுள்ளார்.

சமநேரத்தில் இரண்டு காதலர்களையும் எப்படியோ சமாளித்து, காதல் ட்டியை ஓட்டிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது காதலியும், புதிய காதலனும் புறநகர் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் சந்தித்து கொள்ளும் தகவலிறந்த பழைய காதலன், தனது நண்பர்கள் இருவருடன் அங்கு சென்றுள்ளார்.

புதிய காதலனுடன் உணவருந்திக் கொண்டிருந்த காதலியை கண்டதும், கோபம் உச்சிக்கு ஏறிய பழைய காதலன் ரகளையில் ஈடுபட்டார். அத்துடன் புதிய காதலன் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

உணவக பணியாளர்கள் மற்றும் உணவருந்த வந்த சிலர் ஒன்று சேர்ந்து பழைய காதலனையும், நண்பர்களையும் பிடித்து வெளியேற்றினர். இந்த ரகளையில் உணவு மேசையிலிருந்த கண்ணாடி உணவு தட்டு, தண்ணீர் குவளைகளும் விழுந்த உடைந்தன. அவற்றிற்கான பணத்தை யுவதியும், புதிய காதலனும் செலுத்தி விட்டு, அவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.