மறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி!!


முல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய கேமந்த என்ற வீதிப்போக்குவரத்து பொலீஸ் உத்தியோகத்தர் வீதியில் கடமையில் நின்ற வேளை வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரத்தினை மறித்த போது வேக கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் பொலிஸார் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை பொலீஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் உழவு இயந்திரத்தின் சாரதி முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.