Trending News...

ஆவா குழு நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் வெட்டு!!


யாழ்ப்பாணத்தில் ”ஆவா குழு” என பாதுகாப்புத்தரப்பினரால் பெயரிடப்பட்டு கடும் அட்டகாசம் செய்துவரும் காவாலிகள் தங்களுக்குள்ளும் தற்போது அணி பிரித்து அடிபட்டு வருகின்றார்கள். குழுக்களாகப் பிரிந்து அடிபடும் அவர்கள் தம்மிடம் அகப்படும் மற்றை குழுவைச் சேர்ந்த காவாலிகளை கடுமையாகச் சித்திரவதை புரிவதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இந்தக் காவாலிகளின் செயற்பாடுகளால் காயப்பட்ட காவாலிகளால் யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இது தொடர்பாக பாதுகாப்புத்தரப்பினர் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளார்கள். குறித்த காவாலிகள் கன்னை பிரிந்து தமக்குள் அடிபடுவதை ஏதோ பெரும் கீறோத்தனம் என நினைத்து தமது பேஸ்புக்குகளிலும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றார்கள்

குறித்த குழுவில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் என்பதுடன் குறித்த நபர்களின் பெற்றோர்களில் பலர் குடும்பங்களை வி்ட்டுப் பிரிந்து துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களாக உள்ளதுடன் போதைக்கும் அடிமையானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் காவாலிக் கூட்டத்தில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, அரசாங்கத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் வழிநடாத்துகின்றார் எனவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

தம்மிடம் பிடிபட்ட ஒருவனின் அந்தரங்க உறுப்பை சேதப்படுத்தியும் உள்ளார்கள். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க