காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

 காதலிக்க மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சின்னசேலம் அருகேயுள்ள தொட்டியம் அண்ணாநகரை சேர்ந்தவர் கோவிந்தன். இருவக்கு செல்வி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

இந்நிலையில 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு சென்ற கோவிந்தன், குடும்பத்தினருடன் சேலையூரில் வசித்து வந்துள்ளார். அப்போது 10ஆம் வகுப்பு முடித்த அவரது இரண்டாவது மகள் திருமணம் செய்துகொள்ள அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்து கிடந்த பெண்ணை, அவ்வழியாக சென்ற சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.