யாழ்ப்பாணம் - மன்னார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது..!

 கொரோனா தொற்றுக்குள்ளான மன்னார் பகுதியை சேர்ந்தவர் மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டுமான பணிகளுக்காக தங்கியிருந்தவர் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 

அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதேவேளை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் - மன்னார் இடையிலான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றது.