மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு!

பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கல்வியியல் கல்லூரி மாணவி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.