கொழும்பு தாமரை தடாகம் முன்பு ஏற்பட்ட விபத்து
கொழும்பு 7, தாமரைத்தடாக அரங்கிற்கு அருகிலுள்ள நந்தா மோட்டார்ஸ் காட்சியறைக்குள் ஒரு எஸ்யூவி (வி 8) ரக வாகனமொன்று புகுந்து விபத்திற்குள்ளானது.
இதன்போது, காட்சியறைக்குள் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் எந்த நபரும் காயமடையவில்லை. ஆனால் சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளன.
எஸ்யூவி வாகனத்தை யுவதியொருவர் அதிவேகமாக செலுத்தி வந்துள்ளார். வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, காட்சியறைக்குள் நுழைந்தது.
உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் மகளே விபத்தை ஏற்படுத்தினார்.