Trending News...

குரங்கின் பரிதாப நிலை.

காலி  வாக்வெல்ல, தீபகொட எஸ்டேட் பகுதியில் குரங்கொன்றின் நிலைமை இது. சிரட்டைக்குள் தலை சிக்கிய நிலையில், சில தினங்களாக குரங்கு அந்த பகுதியில் திண்டாடி வருகிறது.

சிரட்டைக்குள் தலை சிக்கியுள்ளதால் குரங்கின் கண் பார்வை தடுக்கப்படுவதுடன், உண்ண முடியாமலும் திண்டாடி வருகிறது.

எனினும், அப்பகுதி மக்கள் குரங்கை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து,  ஹிக்கடுவ வனவிலங்கு அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தனர். இருப்பினும், நேற்று முன்தினம் (11) பிற்பகல் வரை வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள்சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.