15 வயதுச் சிறுமியை நண்பன் வீட்டில் அலங்கோலம் செய்தவனுக்கு நடந்த கதி!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று நண்பனின் வீடொன்றில் தங்க வைத்திருந்த,

சந்தேக நபயொருவரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (10) உத்தரவிட்டார்.

கூம்புகார் கிழக்கு, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 15 வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று,

சந்தேக நபரின் நண்பர் ஒருவரின் வீட்டில் மூன்று நாட்களாக தங்கியிருந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் பெற்றோர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.