விஜயின் சொத்துகளை இலங்கை அரசு சுவீகரிப்பு? – விஜய் தரப்பு பதில்!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் இளைய தளபதி விஜய்க்கு சொந்தமாக இலங்கையில் உள்ள சொத்துகள் சுவீகரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து விஜய் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான சங்கீதாவையே இளைய தளபதி விஜயின் திருமணம் செய்திருந்தார். அந்த வகையில் இலங்கையில் பல சொத்துகள் இளைய தளபதி விஜய் குடும்பத்தின் பெயரில் ஏறங்கனவே வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சொதுகளை இலங்கை அரசு சுவீகரித்துள்ளதாக தகவல்கள் இணைய வெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்தகவலை நடிகர் விஜய் தரப்பு மறுத்திருப்பதாக இந்தியாவில் இருந்து வெளியாகும் ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.