யாழ் மக்களே அவதானம். பெட்ரோல் நிலையங்களில் இடம்பெறும் பகல் கொள்ளை.


நாம் பெரும்பாலும் பெட்ரோல் நிலையங்களில் எமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது அல்டசியமாக இருந்து விடுகின்றோம். இதனை பயன்படுத்தி யாழில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மக்களிடம் பட்டப்பகலிலேயே பணம் கொள்ளையடிக்கின்றார்கள்.

நீங்கள் 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் என எரிபொருள் நிரப்பும் போது 100 அல்லது 200 ரூபாய் குறைவாகவே உங்களுக்கு எரிபொருள் நிரப்ப படுகிறது. இதனை அவதானிக்காமல் பலர் சென்றுவிடுகின்றனர். உங்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக உங்களிடம் கதை கொடுப்பதும் மீட்டரினை உங்களால் பக்க முடியாத இடத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்ப வைப்பதும் என பல வேலைகளை இவர்கள் செய்கின்றார்கள்.

இவ்வாறு நீங்கள் ஏமாற்றப்படாமல் இருக்க எரிபொருள் நிரப்பும்போது கண்டிப்பாக நீங்கள் மீட்டரினை அவதானியுங்கள். இலத்திரனியல் பற்று சீட்டு கிடைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்புங்கள். கண்டிப்பாக அதற்க்கான பற்றுசீட்டினை பெற்றுக்கொள்ளுங்கள். ஏமாறாதீர்கள். அவதானமாக இருங்கள். முடிந்தால் பகிருங்கள்.

- என் அனுபவம்-