அரசியல் இறங்குவதாக அறிவித்த நிலையில் யாழ் இளைஞனை அவசரமாக அழைத்த நடிகர் ரஜினிகாந்!

கட்சி ஆரம்பிப்பது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில் இந்திய அரசியல் சூடுபிடித்துள்ளது.

நேற்று முன்தினம் (3) அவரின் போயஸ்கார்டன் இல்லத்தில் ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அவரின் ஜாதகத்திற்கு ஏற்றார் போல் கட்சி துவக்க தேதியினை அறிவிப்பதற்கு அல்லது அது சம்பந்தப்பட்ட கையெழுத்துகள் இடுவதற்கு ஏற்ற ஒரு மிகவும் நல்ல ஜோதிட நேரங்களை ஜோதிடர் ஆதித்யகுருஜியிடமிருந்து பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படத்தின் 2-ம் பாகமான 2.0 திரைப்படத்தில் தயாரிப்பு பணியை வழிநடத்திய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை, தனது கட்சி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைத்துள்ளதாக அறியமுடிகிறது.