வெளிநாட்டு மாப்பிள்ளையென்றால் உங்களுக்கு இழிச்சவாயனா? வவுனியா பெண் லண்டன் நபருக்கு வைத்த ஆப்பு!

லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபரிடமிருந்து பணத்தை பெற்று சுபபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் தற்போது வேறொருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து, லண்டனில் வசித்து வரும் 35 வயது யாழ்பாணத்தை சேர்ந்த நபருக்கு, வவுனியாவை சேர்ந்த 23 வயது பெண்ணிற்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருவரும் தொலைபேசியூடாக பேசிவந்த நிலையில், லண்டனிலிருக்கும் நபர் குறித்த பெண்ணுக்கு ஐ-போன், கார் என பல பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார்.

குறித்த நபரின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த பெண், தற்போது வவுனியாவிலுள்ள இளைஞன் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுளார்.

குறித்த பெண்ணின் இந்த செயலால் லண்டனிலுள்ள மணமகன் மற்றும் குடும்பம், பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பெண்ணுக்கு கொடுத்த போன் மற்றும் கார்களை திரும்பப்பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.