யாழில் இன்று மின்தடைப்படும் பகுதிகள்….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(27) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, யாழ்.கலட்டி, நாச்சிமார் கோவில் கே.கே.எஸ் வீதியிலிருந்து சிவன் கோவில் கே.கே.எஸ். வீதி வரை, அரசடி வீதி, கஸ்தூரியார் வீதி, பிறவுண் வீதி,சிவன்- பண்ணை வீதி, மானிப்பாய் வீதி, இராமநாதன் வீதி, ஹரிகணன் அச்சகம், எவகிறீன் அச்சகம், Annamalaian Sriragaventhirar Enter Prises ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.