யாழ் கல்வியங்காட்டில் நள்ளிரவு இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட கொள்ளையன்!

 யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீட்டொன்றில் (08) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு திருட முற்பட்ட, இனந்தெரியாத நபர் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள சிவஞானம் கருணாநிதி என்பவரின் வீட்டில் (08-12-2020) செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு திருட முற்பட்ட இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார் இனந்தெரியாத நபரை பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றதோடு மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.