வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட ஆன்,பெண் இருவரின் சடலம்.


கனடாவில் உள்ள ஓரு வீட்டில் ஆண் மற்றும் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் உள்ள ஹால்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள வீட்டில் ஆண் மற்றும் பெண் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்றனர். அதன்படி ப்ரோண்டி தெரு பகுதியில் உள்ள வீட்டை அவர்கள் அடைந்தனர்.

அங்கு ஆண் மற்றும் பெண் பேச்சு மூச்சின்றி கிடந்த நிலையில் அவர்களை பரிசோதித்த போது இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

இது தொடர்பில் யார் மீதும் சந்தேகம் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் எப்படி இறந்தார்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் குறித்து எந்தவொரு தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.