உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இளைஞர் மீது தீராத வெறி. திருமணத்தை நிறுத்திய 2 குழந்தைகளின் தாய் கொலை.

சங்கராபுரம் அருகே திருமணமாகாத இளைஞரின் திருமணத்தை தடுத்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி வெண்ணிலா (38). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். முருகேசன் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட நிலையில் பிள்ளைகளுடன் தாய் வெண்ணிலா வீட்டில் வசித்து வந்தார். கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெண்ணிலா வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில், அவர் சங்கராபுரத்தை அடுத்த வடசிறுவலூா் கிராம எல்லையான மயிலம்பாறை அருகே முட்புதரில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, வெண்ணிலாவின் செல்போன் எண்ணுக்கு சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனியப்பிள்ளை மகன் ரஜினிகாந்த் (32) அடிக்கடி தொடா்பு கொண்டது பேசியது தெரியவந்தது. பின்னர், ரஜினிகாந்தை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் கூறுகையில் ரஜினிகாந்தின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி வந்ததாக கூறப்படுகிறது. வெண்ணிலாவோ,' நீ திருமணம் செய்து கொள்ள கூடாது என்னுடனே இருந்து விடு 'என்று ரஜினிகாந்திடத்தில் கூறியுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 4 லட்சம் ரஜினிகாந்த்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒன்று வாங்கிய பணத்தை கொடு அல்லது திருமணம் செய்ய கூடாது என்று வெண்ணிலா ரஜினிகாந்தை வற்புறுத்தியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் வெண்ணிலாவை கொலை செய்ய திட்டம் தீடியுள்ளார். 

பின்னர், விஐபி நகர் பகுதிக்கு அழைத்து முட்புதரில் வைத்து மது ஊற்றி கொடுத்துள்ளார். வெண்ணிலா மயங்கியதும் இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். வெண்ணிலாவின் செல்போன், கொலுசுகள், தங்கச் செயின்களை எடுத்துக் கொண்டு ரஜினிகாந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆனால், செல்போன் பதிவுகளை ஆராய்ந்ததில் கடைசியாக வெண்ணிலா பயன்படுத்திய செல்போன் எண் ரஜினிகாந்தின் எண்ணாக இருந்தது. இதை கொண்டு ரஜினிகாந்தை போலீசார் கைது செய்தனர்.