27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
- சிகப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 106 ரூபா
- வெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா
- நாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா – தற்போதைய விலை 109 ரூபா
- சம்பா 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 120 ரூபா
- கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா
- கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா
- வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா
- சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா
- தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா
- பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை 188 ரூபா
- பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா
- உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா
- உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 190 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா
- கடலை 1kg : புதிய விலை 225 ரூபா – தற்போதைய விலை 175 ரூபா
- காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா
- ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா
- ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா
- நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா
- தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா
- கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா
- பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா
- சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா
- சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா
- சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா
- வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா
- கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா
- முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா