உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வவுனியாவில் அக்காவைக் கர்ப்பமாக்கிய தம்பி தற்கொலை முயற்சி!!

வவுனியா நகர்ப்பகுதியில் 21 வயதான தனது சொந்த அக்காவை கர்ப்பமாக்கிய 18 வயது மாணவன் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது. 

குறித்த மாணவனின் மடிக்கணனியிலிருந்து பெருமளவான ஆபாச காட்சிகள் அடங்கிய கோப்புக்களும் காணப்பட்டுள்ளது. தந்தை இ்ல்லாத நிலையில் குறித்த உயர்தர வகுப்பு மாணவன் மற்றும் சகோதரி ஆகியோர் வவுனியா நகரப்பகுதிக்கு அண்மையில் தமது தாயாருடன் வாடகை வீட்டில் வயோதிபத் தம்பதிகளுக்கு துணையாக அனெக்ஸ்சாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந் நிலையில் நேற்று முன்தினம் தாயார் இரு பிள்ளைகளையும் கடுமையாகத் தாக்கிய போது வீட்டில் இருந்த முதிய தம்பதிகள் மற்றும் அயலவர்களால் பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பிள்ளைகளைத் தாக்கிய காரணம் தெரியாத போதும் நேற்று 18 வயதான மாணவன் வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைந்த போது அயலவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையிலேயே மாணவன் தனது அக்காவை கர்ப்பமாக்கிய விடயம் அயலவர்களுக்கும் தெரியவந்துள்ளது. நன்றாக கல்வி கற்றுவரும் குறித்த மாணவன் அமைதியான குணமான மாணவன் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். 

அக்காவை அயல் பெண்கள் தாயின் முன் விசாரனை செய்த போது தான் நித்திரையில் இருந்த சந்தர்ப்பங்களில் தனது தம்பி தன்மீது அத்துமீறியிருக்கலாம் என அக்கா கூறியுள்ளார். குறித்த மாணவனின் மடிக்கணனியில் பெருமளவு ஆபாச காட்சிகள் அடங்கிய கோப்புக்களும் அயலவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் அக்காவும் வவுனியாவில் பிரபல பாடசாலையில் உயிரியல்பிரிவில் கற்று பல்கலைக்கழக விஞ்ஞான பீட தெரிவாகும் அளவான புள்ளி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.