வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 157 மில்லியன் திருடிய இளைஞன் கைது!

வவுனியா, வேப்பங்குளத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயது நபர் குற்றவியல் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது தனியார் வங்கி கணக்கிற்கு ரூ. 17.2 மில்லியன் அமெரிக்காவிலிருந்து வைப்பு செய்யப்பட்டிருந்தது.

2020 ஏப்ரலில் அவரது பல வங்கிக் கணக்குகளிற்கு ரூ. 140 மில்லியன் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பணம் அவரது கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 36 சந்தேக நபர்கள்  ஏப்ரல் 2020 முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.