பையனுக்கு வயசு 17.. அதிர வைத்த குற்றம்.. கடைசியில் போர்வையை கிழித்து.. ஷாக்!

கடலூர்: 17 வயது சிறுவன் 15 வயது சிறுமியை காதலித்து.. கடத்தி.. அடுத்தடுத்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் இறுதியில் இப்படி ஒரு சோக முடிவு நடந்துள்ளது.. 

கடலூரில் நடந்த துயர சம்பவம் இது. கடலூர் எஸ்என்சாவடி பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது... பொதுவாக, 18 வயதுக்கு உட்பட்ட குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள் கைதானால், அவர்களை ஜெயிலில் வைக்க முடியாது.. எனவே, போலீசாரால் இதுபோன்ற கூர்நோக்கு இல்லத்தில்தான் கைது செய்து கொண்டு வந்து அடைத்து வைப்பார்கள்.. 

இங்கு சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு நல்ல போதனைகள் வழங்கப்படும்.. கூர்நோக்கு இல்லம் கிட்டத்தட்ட சிறை மாதிரி இருந்தாலும், இந்த கூர்நோக்கு இல்லம் அவர்களை பக்குவப்படுத்தும்.. செய்த குற்றங்கள் குறித்து மனம் வருந்தி, திருந்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். அந்த வகையில், ஒரு சிறுவன் இங்கு கைதாகி அடைத்து வைக்கப்பட்டுள்ளான்.. 

17 வயதாகிறது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்தவன்.. சிறுமி தன் ஏரியாவில் உள்ள 15 வயது சிறுமியை காதலித்துள்ளார்.. அந்த பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.. ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை கடத்தி சென்றும் இருக்கிறார். இப்படி அடுக்கடுக்காக தவறுகளை செய்த சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. 

இறுதியில் தேடி பிடித்து அந்த சிறுவனை கைது செய்தனர். பிறகு, கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் கொண்டு வந்து அடைத்தனர். இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்று, போக்சாவில் கைதான நாள் முதல் அதிர்ச்சியிலேயே சிறுவன் இருந்ததாக தெரிகிறது.. 

மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. நாளுக்கு நாள் இந்த உளைச்சல் அதிகமாகியும் வந்துள்ளது.. இந்நிலையில், நேற்றிரவு, அந்த கூர்நோக்கு இல்லத்தில் எல்லாரும் தூங்கி கொண்டு இருந்திருக்கிறார்கள். இந்த கூர்நோக்கு இல்லத்திற்கு ஒரு செக்யூரிட்டி இருக்கிறார்.. அவர் பெயர் சதீஷ்குமார்.. 

வழக்கம்போலவே, கூர்நோக்கு இல்லம் முழுவதும் நேற்றிரவு சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது சம்பந்தப்பட்ட சிறுவன் ஜன்னலில் தொங்கி கொண்டிருப்பது போல தெரிந்தது.. இதனால் பதறி போன அவர், சிறுவனின் அருகில் சென்று பார்த்தால், தான் வைத்திருந்த போர்வையை கிழித்து அதே ஜன்னலில் தூக்கு மாட்டி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக சூப்பர்வைஸருக்கு இதுகுறித்து தகவல சொல்லவும், அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீசுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. போஸ்ட் மார்ட்டம் விரைந்து வந்த போலீசார் பிணமாக தொங்கிய சிறுவனின் சடலத்தை உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. 

இதுகுறித்த விசாரணையும் தொடஙகி உள்ளனர்.. ரெண்டாங்கெட்டான் வயதில், பக்குவம் இல்லாமல், பிரச்சனையை கையாளவும் முடியாமல், மன உளைச்சலில் சிக்கி, கூர்நோக்கு இல்லத்திலேயே 17 வயது சிறுவனின் இந்த தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூர்நோக்கு இல்லம் கிட்டத்தட்ட சிறை மாதிரி இருந்தாலும், இந்த கூர்நோக்கு இல்லம் அவர்களை பக்குவப்படுத்தும்.. செய்த குற்றங்கள் குறித்து மனம் வருந்தி, திருந்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். அந்த வகையில், ஒரு சிறுவன் இங்கு கைதாகி அடைத்து வைக்கப்பட்டுள்ளான்.. 17 வயதாகிறது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்தவன்..