யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் கைது; 2 லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு


யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் கைதானவர் போதைப்பொருள் கடத்திலில் ஈடுபடுவதுடன் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.