20 வயது கள்ளக்காதலன். கணவனை அடித்தே கொன்று.. வீட்டிற்குள் புதைத்து..

20 வயது கள்ளக்காதலனுக்காக, 2 குழந்தைகளை பெற்ற மேரி என்பவர், கணவனை அடித்து வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது பனையபுரம் என்ற கிராமம்.. 

இந்த கிராமத்தை சேர்ந்தவர் லியோபால்... 33 வயதாகிறது.. இவர் ஒரு வேன் டிரைவர்.. மனைவி பெயர் சுஜித்ரா மேரி.. 30 வயதாகிறது.. 5 மற்றும் 3 வயதில் 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். லியோபாலின் அப்பா சகாயராஜ், கடந்த 8ம் தேதி லியோபாலுக்கு போன் செய்துள்ளார்.. போனை மருமகள் மேரி எடுத்துள்ளார்.. லியோபால் ஒரு கல்யாணத்துக்கு புதுச்சேரி சென்றிருப்பதாக சொன்னார்.. மறுபடியும் பலமுறை போன் செய்தாலும் மேரி இதே காரணத்தையே சொல்லி கொண்டிருந்தார். 

சவாரி இதனால் சகாயராஜுக்கு சந்தேகம் வந்தது.. எனவே, சென்னையில் இருந்து கிளம்பி லியோபால் வீட்டுக்கு வந்தார்.. திடுதிப்பென்று மாமனார் வந்து நின்றதும் மேரிக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. லியோபால் எங்கே என்று சகாயராஜ் கேட்டார்.. ஒரு சவாரிக்கு திருப்பதி சென்றுவிட்டதாக சொன்னார். இதற்கு பிறகு பிப்ரவரி 21ம் தேதி மறுடிபடியும் சகாயராஜ் மகன் வீட்டுக்கு வந்தால், மேரியை காணோம். காயங்கள் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ந்து போன சகாயராஜ் விக்கிரவாண்டி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. 

இதையடுத்து விசாரணையும் நடந்தது.. அப்போதுதான் வீட்டின் பின்பக்கம் ஓரிடத்தில் குழிதோண்டப்பட்ட அடையாளம் இருந்தது.. மண் போட்டு மூடப்பட்டதற்கான தடயம் தென்பட்டது. உடனே அந்த இடத்தை போலீசார் தோண்டினர்.. அப்போதுதான் லியோபாலின் கை, கால்கள் வெளியே நீட்டிக் கொண்டு வந்தன.. அந்த சடலம் புதைக்கப்பட்டிருந்தது.. லியோபாலின் கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது.. 

உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. கள்ளக்காதல் இதையடுத்து, போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.. மேரியின் கள்ளக்காதலும் வெளிப்பட்டது.. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு காலேஜ் மாணவனுடன் மேரிக்கு உறவு இருந்துள்ளது.. அவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.. அவரை விசாரிக்கலாம் என்று பார்த்தால், அவரும் மாயமாகி கிடந்தார். அதனால், போலீசார் இந்த கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தது.. இறுதியில் செல்போன் சிக்னல்கள் வைத்து, கேரளாவில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். லியோபால் இவர்களை போலீசார் விக்கிரவாண்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.. 

அப்போதுதான் மொத்த தகவலும் வெளிவந்தது.. லியோபால் சவாரிக்காக அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவாராம்.. அந்த நேரங்களில் பக்கத்து வீட்டில் 20 வயது ராதாகிருஷ்ணன் மேரியிடம் நெருங்கி பேசி உள்ளார்.. கட்டுமஸ்தான உடல், கலர் கலர் காஸ்ட்லி டிரஸ் என அந்த ஏரியாவேயே ராதாகிருஷ்ணன் வலம் வருவாராம்.. இவருக்கு இன்னொரு பெயர் ராக்கி. ராக்கி இவர்களுக்கு 6 மாதமாகவே கள்ள உறவு இருந்திருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் லியோபால், அவரது நண்பர், ராதாகிருஷ்ணன் 3 பேரும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. 

அப்போது வந்த தகராறில், லியோபாலும், ராதாகிருஷ்ணனும் சேர்ந்து அந்த நண்பரை அடித்து கொன்று, குழிதோண்டி புதைத்துள்ளனர். இதற்கு பிறகுதான், மேரியின் கள்ளக்காதல் பற்றி லியோபாலுக்கு தெரியவந்தது.. கைது இதனால் 2 பேரையும் கூப்பிட்டு லியோபால் கண்டித்துள்ளர்.. எப்படி நண்பரை கொன்று குழி தோண்டி புதைத்தோமோ அதே போல, லியோபாலையும் கொன்று புதைக்க ராதாகிருஷ்ணன் முடிவு செய்தார். சம்பவத்தன்று, போதையில் லியோபால் இருந்தபோது, கள்ளக்காதல் ஜோடி அவரை இரும்புக் கம்பியால் அடித்தே கொன்றுள்ளது.. 

சடலத்தையும் வீட்டு பின்பக்கம் குழிதோண்டி புதைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், ஏற்கனவே கொன்று புதைத்த அந்த நண்பர் யார்? எதற்காக கொன்றார்கள்? அந்த சடலம் எங்கே என்று தெரியவில்லை.. தொடர் விசாரணை நடக்கிறது.