முதலிரவு அறையில் கணவனுக்கு மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி; ஆடிப்போன கணவனின் பரிதாபம் நிலை!


உத்திரபிரதேசம் மாநிலம், பிஜினோரில் இருக்கும் குர்தா கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், புரோக்கர் வழியாக மணப்பெண் பார்த்துள்ளார்.

இதனால், ஹரித்துவார் பகுதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாப்பிள்ளை இரவு முதலிரவு அறையில் காத்துகொண்டு இருந்துள்ளார்.

அப்போது, மணப்பெண் பால் சொம்போடு வராமல் கட்டையை எடுத்து வந்து, விளக்கை அனைத்து மாப்பிள்ளையை கட்டையால் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

பின், மாப்பிள்ளை மயங்கியதும் அங்கிருந்த 2 இலட்சம் திருமண நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியுள்ளார்.

இதன்பின்னர், மயக்கம் தெளிந்த மாப்பிள்ளை உறவினர்களிடம் விஷயத்தை கூறவே, உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பெண்ணை நிச்சியம் செய்ய உதவியாக இருந்த புரோக்கரும் தலைமறைவாகியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.