வைத்தியருடன் நிரஞ்சலா கள்ளத்தொடர்பு. கணவனுக்கு துரோகமிழைத்த குற்ற உணர்ச்சியில் தற்கொலை.


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவர் அண்மையில் வைத்தியசாலைக்குள் உயிரை மாய்த்துக் கொண்டார். ஆபத்தான மருந்துகளை தனக்குத்தானே செலுத்தி அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தனது கணவருக்கு துரோகமிழைத்த குற்ற உணர்ச்சியிலேயே அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிய வருகிறது.

கடந்த 10ஆம் திகதி வைத்தியசாலைக்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கலாமென முதலில் கருதப்பட்டாலும்,  இறப்பிற்கு அது காரணமல்லவென்பது பின்னர் தெரிய வந்தது. தாதிக்கு பக்கத்திலிருந்து மருந்து செலுத்தும் ஊசியொன்று மீட்கப்பட்டிருந்தது.

பின்னர் நடந்த பரிசோதனையில் அவர் ஊசி மருந்து செலுத்தியதாலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

கண்டி, கடுகண்ணாவ பகுதியை சேர்ந்தவர் சமத் (32). தெரணியகல பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சலா (29). 3 வருடங்களின் முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருந்தது. நிரஞ்சலா கொழும்பு தேசிய மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்தார். அவர் இரவு ஷிப்டில் இருந்ததால் வாரத்தில் மூன்று நாட்கள் நேர்சிங் ஹோமில் தங்கினார்.

நிரஞ்சலாவைப் பற்றி சமத்துக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருவரும் மகிழ்ச்சியாக, ஒருவரையொருவர் கட்டுப்படுத்தாமல் வாழ்ந்து வந்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு புதிதாக வந்த, 40 வயதான வைத்தியர் ஒருவர் நிரஞ்சலாவில் மையல் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே திருமணமானவர்.

ஆரம்பத்தில் அவரது விரும்பத்திற்கு உடன்படாத நிரஞ்சலா, நாளடைவில் அவரில் மையல் கொண்டார். இருவருக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டது. இருவரும் பல இடங்களிற்கு ஒன்றாக சென்று வந்தனர்.

கடந்த 9ஆம் திகதி நிரஞ்சலாவிற்கு விடுமுறை. கணவன் சமத்துடன் ஒன்றாக தெரணியகலையில் தங்கியிருந்தார். அப்போது, சமத் எதேச்சையாக மனைவியின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, அதில் அவரது சட்டவிரோத தொடர்பு குறித்த பல படங்களை கண்டார்.

வைத்தியரும் தனது மனைவியும் நெருக்கமாக இருக்கும் படங்களை கண்டு திடுக்கிட்ட அவர், நிரஞ்சலாவை அழைத்து விடயத்தை கேட்டார். அவர் பல்வேறு பொய்களைக் கூறி கேள்வியிலிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் சமத் விடவில்லை. ஏனெனில், போனிலிருந்து பல விடயங்களை அவர் பார்த்து விட்டார்.

இறுதியில் அவள் உண்மையைச் சொல்ல வேண்டியிருந்தது. அதையெல்லாம் கேட்டபின், சமத் அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அன்று அவள் தூக்கமில்லாத இரவு. அவர் செய்த தவறின் தீவிரத்தை அவர் உணர்ந்தார். அவள் கணவனிடம் பலமுறை மன்னிப்பு கேட்டாள். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

நிரஞ்சலாவுடனான பந்தத்தை முடிவு செய்ய தீர்மானித்த சுமத், நிரஞ்சலாவின் பெற்றோரை அங்கு வருமாறு அழைத்தார். அவரை விவாகரத்து செய்வதாக கையொப்பமிடாத கடிதமொன்றையும் தயார் செய்தார்.

மறுநாள் (10) நிரஞ்சலாவின் பெற்றோர் அங்கு சென்றனர். கடிதத்தையும், நிரஞ்சலாவையும் அவர்களிடம் ஒப்படைத்தார் சுமத்.

இதையடுத்து நிரஞ்சலாவை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இடைநடுவில், தான் வேலைக்கு செல்ல விரும்புவதாக கூறி, பணிக்கு கிளம்பினார் நிரஞ்சலா.

அன்று இரவு தேசிய வைத்தியசாலையில், தனக்கு தானே ஆபத்தான மருந்தை செலுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, நெரஞ்சலாவின் நண்பி நேர்சிங் ஹோமில் மயக்கத்தில் கிடப்பதைக் கண்டார். உடனடியாக மற்றவர்களுக்கு தகவல் கொடுத்து சிகிச்சைக்காக நெரஞ்சலாவை அனுமதித்தார். ஆனால் எந்த பயனும் இல்லை. அதற்குள், நிரஞ்சலா உயிரிழந்திருந்தார்.

தனது கணவனிற்கு துரோகமிழைத்த குற்ற உணர்ச்சியில் அவர் உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.