தமிழக மீனவர்கள் படகில் தனிமைப் படுத்துவதால் அவஸ்தை!!

வட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை அவர்களது படகுகளிலேயேதனிமைப் படுத்தப்படுவதால் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு கடற்பகுதியில் கடற்படையினரால் 54 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் படகுகளில் தனிமைப்படுத்தப்படுவதால் உணவு முதல் இயற்கை கடன் களிப்பது வரை பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.