யாழில் இடிந்து வீழ்ந்த பாடசாலைக் கூரைகள்!! மயிழையில் தப்பிய மாணவர்கள்!!

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நுழைவாயில் உள்ள வகுப்பறைக் கட்டடத்தின் மேல் மாடிக் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளமையால் இந்தவழியினூடாக செல்லும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டத்தின் மேல்பகுதியில் ஓடு பொருத்தப்பட்ட கட்டமாகும் மரச்சிலாகை உக்கி சேதமடைந்து சில ஓடுகள் விழுந்து உடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அருகில் உள்ள ஓடுகள் விழக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இது குறித்து பாடசாலையின் அதிபர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இது குறித்து அறிவித்துள்ளார். இதனையடுத்து தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (TO) வந்து பார்வையிட்டு கட்டடத்தின் 70 அடி வரை கூரை வேலைகள் செய்து தருவதாக கூறிச் சென்றனர். எனினும் ஒரு மாதங்கள் ஆகியும் இதனைச் செய்து தரவில்லை. இதனால் பாடசாலை நுழைவாயில் அபாயகரமான நிலையில் உள்ளது. .

இதேவேளை பாடசாலையின் விஞ்ஞான கூடத்தின் கூரையில் ஒருபகுதி ஓடுகளும் உடைந்துள்ளது. இதுதொடர்பில் அதிபரிடம் கேட்டபோது இதனையும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பார்வையிட்டதுடன் விரைவில் ஓடு மாற்றி தருவதாககூறினார். எனினும். இதுவரை அதுவும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூரையினை சரிசெய்து தருமாறு பாடசாலை சமூகத்தினர் கோரியுள்ளனர்.