ஏன் சாரதி மீது எகிறிக் குதித்தேன்?: குஸ்தியிட்ட பொலிஸ்காரர் விளக்கம்!

தனது அதிகாரியை லொறி சாரதி மோதியதால் ஆத்திரப்பட்டு தாக்கி விட்டதாக கைதான மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அவரது மனநிலையை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகேகொட நீதிவான் நேற்று (30) இந்த உத்தரவை பிறப்பித்தார். ஏப்ரல் 5ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலிற்கு உள்ளான ஹப்புத்தளையை சேர்ந்த கலைமகன் பிரவீன் என்ற இளைஞன், 100,000 ரூபா பெறுமதியான தலா இரண்டு காசுப்பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது சாரதி அனுமதிப்பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மஹரகமவில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, தனது அதிகாரியை லொறி சாரதி மோதியதால் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.