22 வயது செல்வி.. நினைச்ச போதெல்லாம் உல் லாசம்.. கடைசியில்.. துண்டு துண்டாக வெ.ட்டி..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கலைச்செல்வி (22). இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கரண் சர்மா என்ற ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கலைசெல்வி கடந்த ஆண்டு செப்டம்பரில் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார். அப்போது கலைசெல்வியின் தந்தை கருப்பசாமி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மகள் மற்றும் பேரனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, உத்தமபாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

விசாரணையில் கலைச்செல்விக்கு திருமணம் செய்வதற்கு முன்பு சின்னமனூரை சேர்ந்த திருமணமான சிலம்பரசன் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிலம்பரசனை பிடித்து விசாரணை செய்ததில் தகாத உறவு விவகாரத்தில் கலைசெல்வி மற்றும் குழந்தையை சிலம்பரசன் மற்றும் அவர் கறிகடையில் வேலை பார்க்கும் ராஜேஸ்சும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே வெட்டி படுகொலை செய்தது அம்பலாமானது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலைச்செல்வியையும், குழந்தையையும் கறி வெட்டும் கத்தியால் இருவரையும் கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்து சின்னமனூர் அய்யணார் குளத்தில் வீசியது தெரியவந்தது. மொத்தம் 3 சாக்கு மூட்டையில், கறியாகவும், எலும்பாகவும் கொடூரமாக வெட்டி வீசி உள்ளனர். சம்பவம் நடந்து 7 மாதம் ஆகி உள்ளதால் எழும்புகளை மட்டும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேனி மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.