ஆனந்த சுதாகரனின் காணியை மோசடி செய்யவில்லை. லண்டணில் உள்ள ஹொட்டல் உரிமையாளர்!

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஹொட்டல் உரிமையாளரின் பெயருக்கு மோசடியான முறையில் மாற்றப்பட்டிருப்பதாக ஆனந்த சுதாகரனின் சகோதரி கடந்த நாட்களில் குற்றம்சாட்டியிருந்தார்.

கிளிநொச்சி – பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரணைமடு பகுதியிலுள்ள காணியே போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட லண்டனை சேர்ந்த ஹொட்டல் உரிமையாளர் இதனை அடியோடு நிராகரித்ததோடு, இதனை முறையாகப் பெற்றதற்கான ஆவணங்களும் தம்வசம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.