மதுபோதையில் ஆடை களைய ரகளை செய்த பௌத்த பிக்கு!


காலியில் உள்ள ஜினோட்ட பகுதியில் உள்ள ஒரு விகாரையை சேர்ந்த பிக்குவொருவர் மதுபோதையில் கலகம் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி ஒருவரைத் தாக்க முயற்சிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்த போதும், கட்டற்ற காட்டாற்று வெள்ளமாக பிக்கு திமிரும் காட்சிகள் வீடியோவிலுள்ளன.  மேலாடை கழன்று விழுந்தும், சண்டித்தனம் காட்டுகிறார்.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றனர்.

காணி தகராற்றினாலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. சம்பவ நேரத்தில் பிக்கு மதுபோதையில் இருந்துள்ளார்.

பொலிசார், பிக்குவை கைது செய்து நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்திய பின்னர் விடுவித்தனர்.

நீதித்துறை மருத்துவ அதிகாரியின் அறிக்கையின்படி மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறினார். எனினும், பிக்கு மீது அப்பகுதியில் யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

அந்த பிக்கு மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.