சுயஸ் கால்வாயில் ட்ராபிக் ஜாம். உலக பொருளாதாரமே நெருக்கடியில்.

உலகில் மனிதர்களால் தோண்டப்பட்ட சுயஸ் கால்வாய், வருமானம் 6 பில்லியன் டாலர். ஒரு கப்பல் அதனூடாக கடந்து செல்ல 3 லட்சம் தொடக்கம் 4 லட்சம் அமெரிக்க டாலரை கட்ட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ? மேலைத்தேய நாடுகளை இந்தியப் பெருங்கடலோடு இணைக்கும் ஒரு கால்வாய் தான் சுயஸ் கால்வாய். இல்லையென்றால் கப்பல்கள் ஆபிரிக்க கண்டத்தை அப்படியே தாண்டி வந்து தான் இந்தியப் பெருங்கடலுக்குள் வர வேண்டும். இதனால் எகிப்த் நாடு சுயஸ் என்னும் இந்த கால்வாயை தோண்டி கப்பல் செல்லக் கூடிய வகையில் பெரும் கால்வாய் ஒன்றை அமைத்து.

அதனூடாக செல்லும் கப்பலிடம் பெரும் தொகைப் பணத்தை அறவிட்டு வந்தது. எகிப்த் நாட்டின் மிகப் பெரிய வருமானத்தில் இது தான் முதன் இடம் வகிக்கிறது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் சுமார் 300 மீட்டர் நீளமான மிகப் பெரிய சரக்கு கப்பல் ஒன்று இதனூடாக சென்றவேளை. அங்கே கடும் காற்று நிலவியது. இதனால் கப்பல் நேராகச் செல்லாமல் ஒரு பக்கமாக திரும்பியதில், அதன் 2 பக்கமும் கால்வாயில் சிக்கி தரை தட்டியுள்ளது. இன்றுவரை முயன்றும் எகிப்த்து நாட்டால் ஒன்றுமோ செய்ய முடியவில்லை.

இது போக சுமார் 250 கப்பல்கள் சுயஸ் கால்வாயைக் கடக்க முடியாத நிலையில் நங்கூரமிட்டு நிற்கிறது. இன் நிலையில் அமெரிக்க கடல் படையின் உதவியை எகிப்த்து நாடியுள்ளதகா சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சுயஸ் கால்வாய் வாழியாக, ஒரு நாளைக்கு மட்டும் 9.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் சென்று எடுத்துச் செல்லப்பட்டு வருகிறதாம். இவை அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளது. வருமானம் போய் விட்டது என்று எகிப்த்து கதறுகிறது. இதில் யார் முந்திக் கொண்டு உதவி செய்வது என்ற போட்டி வல்லாதிக்க நாடுகளிடம் உள்ளது. ஆனால் அமெரிக்கா முந்தி விடும் என்று கூறப்படுகிறது.