விதானையார் இலஞ்சம் வாங்கும் போது மடக்கிப் பிடிக்கப்பட்டார்!

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரை கைது செய்தது.

மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.