சுயஸ் கால்வாய் கப்பல் ஒருவாறு நகர்த்தப்பட்டது.

கடந்த 6 நாட்களாக சுயஸ் கால்வாயை பயன்படுத்த முடியாதவாறு அடைத்துக் கொண்டு இருந்த எவர் கிரீன் என்ற ராட்சச கப்பலை ஒருவாறு அங்கே இருந்து அகற்றியுள்ளார்கள். குறித்த கப்பலை நேராக்கி மீண்டும் ஓடு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதோடு. கப்பல் இனி பயணத்தை மேற்கொண்டு சுயஸ் கால்வாயைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 300 கப்பல்கள் இதனால் தங்கி இருக்கிறது.

அவை அனைத்தும் மிக விரைவாக அங்கிருந்து செல்ல ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக எகிப்த் நாடு அறிவித்துள்ளது. பல உலக நாடுகளில் இதனால் சில பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த நல்ல செய்தி எட்டியுள்ளது.