உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

13 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம். நபரை தேடி விசாரணை!

13 வயது சிறுமியை காலியிலிருந்து நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரொருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக குறித்த சந்தேகநபருடன் இந்த சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சிறுமி கடந்த வாரம் அதிகாலையில் வீட்டிலிருந்து காலி பேருந்து தரிப்பிடத்துக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளதுடன், அங்கு சந்தேகநபரான இளைஞனை சந்தித்துள்ளார்.

பின்னர் இவர்கள் இருவரும் பேருந்தின் ஊடாக நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்று சென்றுள்ளதாகவும், அங்குவைத்து சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் சிறுமியை கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான இளைஞனை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.