உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மது போதையில் வாகனம் செலுத்தி 24 மணிநேரத்தில் 758 நபர்கள் கைது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த 24 மணிநேரத்தில் 758 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறோனரின் வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்த  அவர், மது போதையுடன் பயணிக்கும் சாரதிகளுக்கு மேலதிகமாக வீதிச் சட்டங்களை மீறுவோரையும் சட்டத்தின் முன் நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 121 வீதி விபத்துக்கள் பதிவாகியுளளதாகவும் அதனால் 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.