அடுத்தடுத்து 8 கல்யாணம்’ மனைவியை மிரட்டி, கணவன் செய்ய வைத்த வேலை.


ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் அடுத்தடுத்து 8 திருமணங்கள் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்குப் போதைப் பொருள் கடத்தும் கும்பல் மற்றும் பாலியல் தொழில் செய்யும் கும்பலுடனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அருண் குமார் கத்தியைக் காட்டியும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்களைப் பணிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது முதல் மனைவியின் மகளை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதோடு தனது முதல் மனைவி கீதாஞ்சலி, 2வது மனைவி லட்சுமி ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அருண்குமார் மொத்தம் 8 திருமணம் செய்த நிலையில் அனைவரையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு மேல் கொடுமையைத் தாங்க முடியாது என முடிவு செய்த முதல் மனைவி கீதாஞ்சலி, 2வது மனைவி லட்சுமி, அருண் குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்கள். புகார் அளித்துள்ளதால் தங்கள் கணவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்கள் புகாரில் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூர் போலீசார் இருவரின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் இந்த புகார் குறித்தது அறிந்த அருண் குமார், நீங்கள் புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இருவரும் மகளிர் ஆணையம் முன்பு தங்கள் புகாரைத் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக மாநகர காவல் ஆணையரின் பார்வைக்குக் கொண்டு சென்றார்கள். அதோடு அருண் குமார் இருவரையும் மிரட்டிய ஆடியோ உரையாடலையும் தங்கள் புகாரில் இணைத்துக் காவல் ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கீதாஞ்சலி, லட்சுமியின் புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உள்ளூர் போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதோடு அருண் குமாரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கீதாஞ்சலி, லட்சுமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத உள்ளூர் போலீசார் மீதும் நடவடிக்கை பாயும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.