உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் துப்பாக்கி சூடு..! இருவர் படுகாயம், விசேட அதிரடிப்படையினரே துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்..

யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் விசேட அதிரடிப்படையினரே தம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக காயமடைந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.