உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் வாய்க்காலுக்குள் பாய்ந்தது மோட்டார் சைக்கிள்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் நேற்று இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வள்ளிபுனம் பகுதியில் பாலம் ஒன்று புனரமைப்பு பணி நடைபெற்றுவருகிறது.

குறித்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாகவே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரவு பத்து மணியளவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிரந்தர பாலம் அமைக்கப்பட்டுவருகின்ற பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், அவருடன் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் விபத்துக்கு உள்ளானவர்களின் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.