யாழில் பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் ஆசாமிகள்!

புத்தூர், சிறுப்பிட்டி, ஆவரங்கால் மற்றும் அச்சுவேலி பிரதேசங்களில் புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரியில் கல்வி பயிலும் வறிய / அங்கவீனமான மாணவர்களுக்கான உதவி என்ற பெயரில் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில ஆசாமிகள் ஈடுட்டுள்ளனர்.

மேலும் சில இடங்களில் கல்லூரியின் பெயரில் நவீல் பாடசாலை போன்ற சில அமைப்புக்களுக்கான நன்கொடை சேகரிக்கின்றோம் என்ற ரீதியிலும் அவர்கள் பணம் சேகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பணம் சேகரிக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறு பணம் சேகரிப்போருக்கும் எமது கல்லூரிக்கும் அல்லது கல்லூரியில் இயங்கும் பழைய மாணவர் சங்கம் போன்ற எந்த அமைப்புக்கும் தொடர்புமில்லையெனவும் கல்லூரி அதிபர் தெரிவித்தார்

இதுகுறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறு பணம் சேகரிப்பவர்களின் விபரம் தெரிந்தால் அதுகுறித்து கல்லூரி அதிபருக்கோ அல்லது அருகிலுள்ள பொலீஸ் நிலையத்திலோ முறையிடுமாறும் கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்டார்.