உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கோர விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வீதி விபத்தில் சிக்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு கல்முனை நோக்கி இன்று காலை 3.45 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் தமக்கோ வாகனத்தில் பயணித்த ஏனையோருக்கோ எந்த பாதிப்பும் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எமக்கு தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.