உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ். மோட்டார் சைக்கிள் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..


வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கிய நிலையில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் யாழ்.மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் இயக்கியுள்ளான். இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதான குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதனையடுத்து குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை 8 வயது சிறுவனின் சகோதரியாகும்.