உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

உல்லாச நேரத்தில் வந்த சண்டை. கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற லாரி ஓட்டுநர்..!

திண்டுக்கல்லில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த செந்தில்மணி. இவரது மனைவி ரஞ்சிதா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 29-ம் தேதி  மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ரஞ்சிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரஞ்சிதாவின் செல்போன் எண்ணை வைத்து சோதனை செய்ததில் அவர் லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (30) என்பவரிடம் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது.

இதனையடுத்து ராஜ்குமாரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். பின்னர், போலீசார் பாணியில் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், எனக்கும் ரஞ்சிதாவுக்கும் திருமணத்துக்கு முன்பு இருந்தே பழக்கம் இருந்தது. இதனால் எங்களை பிரித்து ரஞ்சிதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர். அதன் பிறகு நான் வேறு பெண்ணை திருமணம் செய்து எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இருந்த போதும் நானும் ரஞ்சிதாவும் தொடர்ந்து பேசி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். 

நாளடைவில் எங்கள் கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரியவந்தது. பின்னர், கணவனை மனைவி கண்டித்துள்ளார். இதனையடுத்து நாங்கள் 2 பேரும் புதிய சிம் கார்டுகள் வாங்கி அதன் மூலம் பேசி வந்தோம். கடந்த 29-ம் தேதி அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக போன் செய்து அழைத்தேன். அப்போது இருசக்கர வாகனத்தில் மறைவான இடத்துக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்த போது திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்து அவரை கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்தார். பின்னர், பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி  எரித்துவிட்டேன் என்றார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரஞ்சிதா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.