உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வவுனியாவில் மாமியாரையும் மச்சனையும் கத்தியால் குத்திய இளைஞன்.


வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், மருமகன் மேற்கொண்ட தாக்குதலில் மாமியார் மற்றும் மச்சான் மீது கத்திக்குத்து சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மரம் ஒன்றுடன் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மச்சானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார் .

மேலும் இந்நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் இடுப்பு முதுகில் குத்தியுள்ளார் . இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் .

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்ட இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

மேலும் காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) , அசோகன் வசந்தி (வயது – 52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது .