காதலனின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய யுவதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அழகுக்கலை நிபுணரின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சிறி ராகல ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார்.

சிஐடியின் கணினி குற்றங்கள் புலனாய்வுப் பிரிவினால் அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டு குற்றவாளி என யுவதி ஒப்புக் கொண்டதையடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் (1)இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

யுவதிக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ரூ .1,500 அபராதம் செலுத்தவும், அவர் பணம் செலுத்தவில்லை எனில், அவருக்கு கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

பொலன்னறுவையில் வசிக்கும் ரசிகலா சந்தமாலி லியானகே என்ற யுவதி மீதே குற்றச்சாட்டு பதிவானது. தன்னுடன் காதல் தொடர்பில் இருந்த பொலன்னறுவையில் வசிக்கும் ஒரு அழகுக்கலை நிபுணர் சிஐடியின் கணினி குற்றப்பிரிவுக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.