உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கம்பெனியில் கள்ளக்காதலனுடன் உல் லாசம்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை


கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்று மண்ணை போட்டு மூடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் கோலப்பொடி பேக்கிங் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர்(32) என்பவர் அங்கு தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் நாகராஜ் என்பவரின் மனைவி அமுதாவிற்கும் சங்கருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 12:30 மணியளவில் கம்பெனியில் அமுதாவும் சங்கரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதனை கண்ட நாகராஜ் இருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது சங்கர் அங்கிருந்த சுத்தியை கொண்டு தாக்கியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நாகராஜை அமுதாவும், சங்கரும் கம்பெனியின் பின்புறம் மண்ணை போட்டு மூடியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை இச்சம்பவத்தை அறிந்த கம்பெனியின் உரிமையாளர் மயில்வாகனம் மதுக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அமுதாவையும் சங்கரையும் கைது செய்தனர்.

இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று மண்ணை போட்டு மூடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.